ஆங்கில புத்தாண்டையொட்டி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை!!
தஞ்சை நகரின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கடம் நகர். இந்த நகரில் உள்ள ஸ்ரீ சங்க நிவர்த்தி விநாயகர் ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டான இன்று மிகச் சிறப்பான முறையில் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
தனுர் மாதமான மார்கழி மாதத்தில் அனைத்து ஆலயங்களிலும் காலை நேரத்திலேயே பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
தனுர் மாதத்தில் ஆங்கில புத்தாண்டு வருவதையொட்டி சிறப்பான முறையில் பூஜை மற்றும் அன்னதானம் செய்ய விழா குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இன்றைய பூஜை மற்றும் அன்னதானத்திற்கு உபயதாரர் திரு அன்பழகன் அவர்கள் சிறப்பான முறையில் அன்னதானம் மற்றும் பூஜைக்கான பொருட்களை தருவித்து தந்தார். அதிகாலையில் சிவாச்சாரியார் திரு ஞான சுந்தரம் அவர்கள் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நவகிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து விட்டு இறுதியாக சங்கட நிவர்த்தி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து சிறப்பான முறையில் அலங்காரம் செய்வித்தார்.
திருவேங்கடம் நகர், அசோக் நகர் மற்றும் அருகில் உள்ள மக்கள் பெரும்பான்மையானோர் காலை முதலே தரிசனத்திற்காக காத்திருந்தனர் .சுமார் எட்டு முப்பது மணி அளவில் அனைத்து பூஜைகளும் முடிந்து பஞ்ச தீபாராதனை காட்டப்பட்டது அதன்பின்னர் உபயதாரர்கள் ஐந்து விதமான பிரசாதங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாட்டினை திரு ஓம் சக்தி ராதாகிருஷ்ணன் திரு ராஜசேகர் திரு ஸ்ரீராம் மற்றும் ஆலய சிவாச்சாரியார் ஞானசுந்தரம் அவர்கள் சிறப்பான முறையில் செய்து விசாரித்து அனைவரையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments