இரு சக்கர வாகனம் மோதி தலைமை காவலர் உயிரிழப்பு. !!

   -MMH 

  கோவை விமான நிலைய பகுதியில் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் வந்த தலைமை காவலர் பலி போலீசார் விசாரணை.

பீளமேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் காளப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 49) இவர் நேற்று மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் ஏர்போர்ட் சாலையில் வீட்டுக்கு  சென்று கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த ட்ராவல்ஸ் பேருந்து அவர் மீது மோதியதில் தலைமை காவலர் அந்த  இடத்திலேயே கீழே விழுந்து பலத்த காயமுற்றரார். 

அருகிலிருந்தவர்கள் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைப் பற்றி வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட புலனாய்வு காவல்துறையினர் பேருந்தை ஓட்டி வந்த மோகன்ராஜ் (வயது 32) என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments