கழுத்து வலி, இடுப்பு, எலும்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை நவீன முறையில் செய்து வரும் மருத்துவமனைக்கு பாராட்டு !!

.   -MMH 

   கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ப்ரீத்தி எலும்பு முறிவு மற்றும் பல்நோக்கு மருத்துவமனையில் கழுத்து வலி, இடுப்பு, எலும்பு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை நவீன முறையில் செய்து வருவதாக தலைமை மருத்துவர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலை 9 வது வீதி எக்ஸ்டென்சன் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக எலும்பு மூட்டு மற்றும் பல்துறை சிகிச்சையில் சிறந்து விளங்கி வரும் ப்ரீத்தி மருத்துவமனை தற்போது நவீன வகை சி.டி.ஸ்கேன் எந்திரம் நிறுவப்பட்டது. இதற்கான துவக்க விழாவில் மருத்ருவமனையின் செயல்பாடுகள் குறித்து நிர்வாக இயக்குனர் மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் தண்டபாணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,கோபியை சேர்ந்த இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக கழுத்து வலியால் அவதிப்பட்ட நிலையில்,டைட்டானியம் தகடு பொருத்தி நவீன சிகிச்சையால் குணப்படுத்தியாக தெரிவித்தார். குறிப்பாக முதியவர்களுக்கு எலும்பு தொடர்பான சிகிச்சைகளை சிறப்பாக செய்து வருவதாக கூறிய அவர்,செல்வபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்ற  80 வயது முதியவருக்கு எலும்பு முறிவு மற்றும்  குடலிறக்க அறுவை சிகிச்சைகள் செய்து முதியவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்திவமனையின் பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு சிகிச்சை மருத்துவர் ராஜேந்திரன் நடுத்தர வயது பெண் ஒருவரின் கர்ப்பபையில் இருந்த சுமார் மூன்றரை கிலோ கட்டியை நவீன சிகிச்சை மூலம் அகற்றி உள்ளதாக கூறிய அவர்,தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது மருத்துவர் ப்ரீத்தி உடனிருந்தார். பல்வேறு சிகிச்சைகளை நவீன முறையில் குணப்படுத்தி வரும் ப்ரீத்தி மருத்துவமனையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருவது குறிப்பிடதக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments