ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய கரும்புகள் அனுப்பும் பணி தீவிரம்!!

   -MMH 

   ரேஷன் கடைகளில் வினியோகம் செய்ய  கரும்புகள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது!

தமிழர்களின் தைத்திருநாள் விழா வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் தயாரிக்கும் பணி தீவரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழஙகப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  இதையடுத்து மாவட்ட வழங்கல் துறை சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் வடசித்தூர் ரேஷன் கடையில் இருந்து மற்ற ரேஷன் கடைக்கு கொண்டு செல்ல லாரியில் கரும்பு ஏற்றப்பட்டது. 

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பான பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கரும்பு, மிளகு, புளி, ரவை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், கடுகு, உளுந்தம் பருப்பு, கோதுமை மாவு, உப்பு, துடிப்பை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்பட உள்ளது. அதற்காக வடசித்தூர் ரேஷன் கடையில் இருந்து பனப்பட்டி, மெட்டுவாவி, காவிலிபாளையம், பெரியகளந்தை, கொண்டம்பட்டி, குருநல்லிபாளையம், அரசம்பாளையம், காரச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரி மூலம் கரும்புகள் கொண்டு செல்லும் பணி தீவிரமாக  நடந்து வருகிறது. 

மேட்டூர் அருகே உள்ள போலாம்பட்டியில் இருந்து கரும்புகள் வந்துள்ளது. இப்பணியை வடசித்தூர் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments