வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தெருமுனை பிரச்சாரம் ! ஆடல் பாடலுடன் நடைபெறுவதால் மாணவ மாணவியர் உற்சாகம்! !

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரத்தில் அதிக அளவு எஸ்டேட் பகுதியில் உள்ளன. நமது தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற  திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.இந்த திட்டம் அனைத்து ஊர்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நமது கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதியில் உள்ள முடீஸ் எனும் எஸ்டேட் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் என்ற  திட்டத்தின்படி ஆடல் பாடலுடன் தெருமுனை பிரச்சாரம் செய்து வருகிறார்கள் இதனால் மக்களிடமும் இளம் வயதினரிடமும் கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகள் அதனால் நமது வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் போன்றவை எடுத்துக் கூறப்பட்டு அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற திட்டத்தின் மூலமும் அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று பிரச்சாரம் செய்வதன் மூலமும் நமது மாநிலத்தின் கல்வி பயில்வோரின் சதவீதம் அதிகரிக்கும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-சி.ராஜேந்திரன், செந்தில்குமார் முடீஸ்.Comments