டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

   -MMH 

  டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள்! !

கோவையில் கொரோனா தொற்று பரவரலுக்கு நடுவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதுகுறித்து சுகாதார துறையினர் கூறும்போது,

"தற்போது கோவை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. தற்போது பகல் நேரங்களில் வெயில் நன்றாக அடிப்பதால் கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது. கோவை மாநகர் பகுதியில் ஒரு வார்டுக்கு 15 பேர் வீதம் 1,500 பேர் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாக சில இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உள்ளதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது கோவையில் 32 குழந்தைகள் உள்பட 47 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்." இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments