லாரி டிரைவரை தாக்கிய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்..!!!

   -MMH 

   திருச்சி மாவட்டம் சயமபுரம் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது லாரி ஓட்டுநரை தாக்கிய புகாரில் போக்குவரத்து உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னையில் இருந்து திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்துக்கு இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஆயரசன் என்பவர் லாரியை ஓட்டி வந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி வந்தபோது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ், வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார். மேலும், அளவுக்கு அதிகமாக இரும்பை ஏற்றி வந்ததால் அபராதமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டுமென கூறியுள்ளார்

இதனை ஆயரசன் வழங்க மறுத்ததால் அவருக்கும், உதவி ஆய்வாளர் செல்வராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ஆத்திரத்தில் உதவி ஆய்வாளர் செல்வராஜ், ஓட்டுநரை கால்களால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, லாரி ஒட்டுநர் செல்வராஜ், சக லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, லாரி ஓட்டுநரை தாக்கிய புகாரில் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் உத்தரவிட்டார்.

-N.V.கண்ணபிரான்.

Comments