மலைப்பாம்பிடம் மாட்டிய ஆட்டுகுட்டி !!

   -MMH 

   கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள வண்டிக்காரனூர் கிராமம் மணல்காடு என்ற பகுதியில் சிலர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, ஒரு ஆடு காணாமல் போய் உள்ளது. இதனால் கால்நடை மேய்ப்பவர்கள் ஆட்டை தேடியுள்ளனர். அப்போது, அருகில் உள்ள பள்ளத்துக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஆட்டுக்குட்டியை சுற்றியபடி கிடந்துள்ளது. 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கால்நடை மேய்ப்பவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் தனராஜ் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதருக்குள் மறைந்திருந்த மலைப்பாம்பின் பிடியில் இருந்து ஆட்டுக்குட்டியை மீட்டனர். எனினும் சிறிது நேரத்தில் ஆட்டுக்குட்டி உயிரிழந்தது. பின்னர், 12 அடி நீள மலைப்பாம்பை பிடித்த அவர்கள், அதனை மருதமலை அணை மடுகு வனப்பகுதிக்குள் சென்று பத்திரமைக விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு கடந்த சில வாரங்களில் 2 ஆட்டுக்குட்டிகள், மயிலை கொன்று உணவாக உட்கொண்டது தெரியவந்தது!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments