மூடனின் வார்த்தையை நம்பி முடிந்துபோன வாழ்க்கை...!!

   -MMH 

   அப்ப நாயக்கன் பாளையம் அருகே குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக் கேட்டு மாற்றுத்திறனாளி மகள் மற்றும் தாய் தற்கொலை

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள அப்ப நாய்க்கன்பாளையம் பார்க் சிட்டி என்ற இடத்தில் வசிப்பவர் தனலட்சுமி (வயது 53). இவரது கணவர் திருமூர்த்தி 11 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். தனலட்சுமிக்கு சரவணகுமார் என்ற ஒரு மகனும் சுகன்யா என்ற மாற்றுத்திறனாளி மகளும் உள்ளனர். சரவணகுமார் I.T கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபட்டால் விவாகரத்து ஆகிவிட்டது. 

இந்நிலையில் தனலட்சுமி மாற்றுத்திறனாளியான மகள் சுகன்யா உடன் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடுகுடுப்பைக்காரன் தனலட்சுமியின் வீட்டின் முன்பு வந்து தனலட்சுமிக்கு பிரச்சினை இருப்பதாகவும் வரும் பௌர்ணமி அன்று தனலட்சுமியின் கை கால் விளங்காமல் போய்விடும் என்று கூறி உள்ளான். இதை நம்பி தனலட்சுமியும் 250 ரூபாய் பணமும்  குடுகுடுப்பை காரனுக்கு கொடுத்துள்ளார். இதைப் பற்றி தனலட்சுமி தன் மகன் சரவணகுமாருக்கு போன் செய்து கூற சரவணகுமார் இதை எல்லாம் நம்ப வேண்டாம் என்றும் பத்திரமாக வீட்டில் இருந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். 

நேற்று காலை சரவணகுமார் தன் தாய்க்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் இல் இருந்துள்ளது. இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு போன் செய்து தன் தாயின் நிலை பற்றி பார்க்கச் சொல்லி இருக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர்களும் தனலட்சுமி வீட்டுக்கு சென்று பார்க்கையில் முன் கதவு திறந்திருந்த நிலையில் தனலட்சுமி உள் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இடத்துக்கு விரைந்து வந்த துடியலூர் காவல்துறையினர் பிரேதங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி சுகன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரித்து வருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments