ஆனைமலை தோட்டத்தில் இளைஞருக்கு அடி உதை..!!

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் ஹரிஹரசுதாகர். இவர் அதே பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே தோட்டத்தில் பணிபுரியும் மதுரையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹரிஹரனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஹரிஹரன் அங்கு பணிக்கு செல்லாமல் வேறு தொழிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இருவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசி வந்ததை கண்ட தோட்டத்து உரிமையாளர் ஹரிஹரனின் உறவினர்களிடம் கூறி இனிமேல் பேச கூடாது என மிரட்டி வந்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் இருவரும் தொலைபேசியில் பேசியதால் ஹரிஹர சுதாகரனை தனது தோட்டத்திற்கு அழைத்து வருமாறு தோட்டத்து உரிமையாளரான ராமசாமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது காதலியை பார்க்க ஹரிஹர சுதாகரன் ராமசாமியின் தோட்டத்துக்கு சென்றுள்ளார் அங்கு இருந்த தோட்டத்து கணக்குப்பிள்ளை கேசவன் மற்றும் தொழிலாளியான காளிமுத்து ராமன் மற்றும் அங்கு பணிபுரிந்த வடமாநில இளைஞர்கள் இருவரும் மற்றும் தோட்டத்து உரிமையாளரான ராமசாமி ஆகியோர் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும் இளைஞரை தோட்டத்திலிருந்து வெளியே விடாமல் இரவு முழுவதும் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ளனர். இதன்காரணமாக அந்த இளைஞர் மயக்கமடைந்துள்ளனர். பின்னர் அவரை அங்கிருந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். உடலில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த இளைஞரை விசாரித்த அவரது தந்தை குமார் ஆனைமலை காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் தோட்டத்து உரிமையாளராக ராமசாமி மாற்றம் கணக்குப்பிள்ளை கேசவன் உள்ளிட்ட 6 பேர் மீது பொள்ளாச்சி அனமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments