எஸ்.எஸ்.கோட்டை அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை! மனைவியிடம் காவல்துறை விசாரணை!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், கொள்ளுக்குடிபட்டியை சேர்ந்தவர் சின்னையா என்பவர் மகன் முருகேசன்(வயது 43). இவர் 14 வருடங்களுக்கு முன்பு வாணி(39) என்ற பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, அவருடன் மதுரையில் வசித்து வருகிறார். முருகேசன் - வாணி தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. மேலும், முருகேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

அவரது குடும்பத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவுநேரத்தில் முருகேசன் மட்டும் மதுரையிலிருந்து கொள்ளுக்குடிப்பட்டிக்கு தனியாக வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டினுள் முருகேசன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் எஸ்.எஸ்.கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் முருகேசன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments