பழைய வால்பாறை குடியிருப்பு பகுதியில் தீ விபத்து! வீடுகள் எரிந்து நாசம்! ! உடமைகளை இழந்து தவிக்கும் குடியிருப்புவாசிகள் !!!

     -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறையில் பழைய வால்பாறை என்னும் பகுதியில் ஏழு வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த ஏழு வீடுகளிலும் மக்கள் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் நேற்று இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு அது அனைத்து வீடுகளுக்கும் பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இந்த குடியிருப்பில் உள்ள ஏழு வீடுகளும் தீ விபத்தில் சிக்கி உள்ளது. தீ விபத்தின் போது அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் உடனடியாக வீட்டைவிட்டு வெளியே வந்ததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.ஆனால் வீடுகள் எரிந்து வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.

இங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் தங்களுடைய உடைமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சி.ராஜேந்திரன்

செந்தில்குமார் (முடீஸ் )

Comments