சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் நாளை மின் தடை!

   -MMH 

   சிங்கம்புணரி உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின்நிலையத்தில் நாளை (ஜன.10) உயர் மின்அழுத்த பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிங்கம்புணரி நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலப்பட்டி, அரசினம்பட்டி, சிவபுரிபட்டி, பிரான்மலை, கிருங்காக்கோட்டை, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, சதுர்வேதமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments