திருப்பூர் மத்திய மாவட்ட பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது!!

   -MMH 

   திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரிடம் மின்சார வாரிய தொமுச செயலாளர் திமுகழக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை பெற்றார்.

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமைத் தொடங்கி வைத்து முதல்வர்  கொளத்தூரில் வீடு வீடாகச் சென்று திமுக உறுப்பினர் சேர்க்கைப் பணியில் ஈடுபட்டார். தமிழகம்  முழுக்க கழக நிர்வாகிகள் திமுகவில் அதிகளவில் இணைக்கும்மாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகள் திமுக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து புதிய உறுப்பினர்களை இணைத்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் திருப்பூர் மத்திய மாவட்ட பகுதியில் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக  திருப்பூா் மத்திய மாவட்ட திமுகழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ் எம் எல் ஏ அவர்களிடம் மின்சார வாரிய தொமுச சார்பில் அதிகளவில் உறுப்பினர்களை இணைக்க செயலாளர் ஈ.பி.அ.சரவணன் திமுகழக உறுப்பினர் படிவத்தை பெற்றுக்கொண்டார். 

இதில் மத்திய மாவட்ட திமுகழக செ. திலக்ராஜ், மோட்டார் தொமுச துரை ரவிச்சந்திரன், 16 வது வார்டு செயலாளர் மயில்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-துல்கர்னி உடுமலை.

Comments