தேர்தல் பணியில் 2,500 போலீசார்!!

 -MMH

கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள், மாநகரில் பதற்றமான இடங்கள் மற்றும் முக்கிய சாலையில் பாதுகாப்பு பணியில் இந்த போலீசார் ஈடுபட உள்ளனர். 

தமிழக போலீஸ் ஒரு கம்பெனியிலிருந்து 80 பேர் வீதம், 4 கம்பெனிகளிலிருந்து, 320 போலீசார் இன்று கோவை வர உள்ளனர். மேலும், கோவை மாநகர் மற்றும் ஊர்காவல் படையிலிருந்து 2,180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று முதல் போலீசாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments