கோவையில் சுயேச்சை வேட்பாளர்கள் பம்பரமாக சுற்றி வாக்கு சேகரிப்பு! 96வது வார்டில் ஸ்கேல் கணேஷ் மக்களுக்கு வாக்குறுதி அளித்து தீவிர ஓட்டு வேட்டை!!

 

-MMH

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகின்ற உள்ளாட்சித் தேர்தலில்  அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் 96வது வார்டில் முன்னாள் M.C சொக்கலிங்கம் என்பவரது மகன் ஸ்கேல் கணேஷ் என்பவர் போட்டியிடுகின்றனர்.

இவர் குறிச்சி குளம் பாதுகாப்பு அமைப்பில் தன்னார்வலராக உள்ளார் மேலும் அந்த பகுதியில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்து பொது மக்களின் காவலனாக இருந்து வருகிறார். மக்கள் எளிய முறையில் அணுகக்கூடிய சமூக ஆர்வலராகவும் உள்ளார் இவர் வருகிற 19-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 96 வது வார்டில் வைரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார்

வைரம் தினத்தில் 96வது வார்டில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. ஸ்கேல் கணேஷ் அவர்கள் என்னை இந்தப் பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுத்தால் நான் மக்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் அறிந்து பணியாற்றுவேன் என்றும் இந்தப் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனை கழிவுநீர் வாய்க்கால் பிரச்சனை தெருக்களில் சாலைகள் அமைப்பது மற்றும் மின் விளக்குகள் போடுவது உள்பட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து கொடுப்பேன் என்று பொது மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஒரு வார்டு கவுன்சிலராக பொதுமக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்து சேவைகளையும் சிறப்பாக செய்து கொடுப்பேன் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

நிருபர்கள்

-ஈஷா. சி.ராஜேந்திரன்.

Comments