போத்தனூர் குறிச்சி 99வது வார்டில் மணி ஸ்டோர்ஸ் ஐ,பிரபு மக்களிடம் ஓட்டு சேகரிப்பு..!!
கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் வருகின்ற 19ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதில் அரசியல் கட்சியினரும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
99வது வார்டில் மணி ஸ்டோர்ஸ் ஐ,பிரபு கைப்பை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை அறிந்து அதை நிவர்த்தி செய்து கொடுப்பேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார்.
99வது வார்டில் கைப்பை சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மணி ஸ்டோர்ஸ் ஐ.பிரபு என்னை இந்தப் பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுத்தால் நான் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,
தெருவிளக்குகள்சாக்கடை கால்வாய், மற்றும் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து கொடுப்பேன் என்றும் பொதுமக்கள் என்னை மிக எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
நிருபர்கள்
-ஈஷா. சி.ராஜேந்திரன்.
Comments