ரஷ்யா உக்ரைன் உச்சகட்ட போரை நிறுத்த வலியுறுத்தி தமிழக மாணவர்கள் மனிதச்சங்கிலி போராட்டம்!!

    -MMH 

   ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளுக்கிடையே கடந்த சில தினங்களாக கடும் ஆயுதப்போர் நடைபெற்று வருகிறது இந்தப் போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்கிற செய்தி  உலகம் முழுவதும் மக்கள் மனதில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம் அதேசமயம்  இந்தப் போர் முடிவுக்கு விரைவில் வரவேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆலங்கடவு அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும்   20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்  உதவியுடன்  ஒன்றிணைந்து ரஷ்யா உக்ரைன்  இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் உச்சகட்ட போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி மீன்கரை சாலை,சத்தி சோயாஸ், ஆலங்கடவு பிரிவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி  மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்டு அவ்வழித்தடத்தில் பயணித்த பொதுமக்கள் மாணவர்களுக்கு ஆதரவளித்த தோடு நிற்காமல் மாணவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி அன்பைப் பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments