குழந்தைகளுக்கான பொழுது போக்கு அரங்கம் கோவையில்!! - மக்களிடையே பெரும் வரவேற்பு.

   -MMH 

    கோவை உக்கடம் செல்வபுரம் பைபாஸ் சாலையில்,ஃபுட் அண்ட் ஃபான்டஸி (Food and Fantasy) எனும் குழந்தைகளுக்கான பொழுது போக்கு அரங்கம் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கோவை உக்கடம் செல்வபுரம் பைபாஸ் சாலையில், எஸ்.எம்.எஸ். அபார்ட்மென்ட் அருகே ஃபுட் அண்ட் ஃபான்டஸி எனும்  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுது போக்கு மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு குழந்தைகளுக்கான பல்வேறு விதமான விளையாட்டு அம்சங்களுடன் அனைத்து  துரித வகை உணவுகள்,சவர்மா,பார்பிக்யூ சிக்கன், பிரியாணி, உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளும் ஒரே இடத்தில் தனித்தனி சுவையுடன் கிடைக்கின்றன.இந்நிலையில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூன்று நாட்கள் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி இந்த வளாகத்தில் துவங்கப்பட்டது. இதற்கான விழாவில் தி.மு.க.மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மாரிசெல்வன்,மற்றும் 80 வது வட்ட கழக செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.உடன் 80 வது வட்ட நிர்வாகிகள் மணி என்ற நரசிங்க பெருமாள்,புயல் சரவணன்,கோபிநாத்,சரண்ராஜ்,ஆகியோர் உடனிருந்தனர்.பொழுது போக்கு மையம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஸ்வின் மற்றும் கிருஷ்ணபிரசாத் கூறுகையில்,ஒரே கூரையின் கீழ் உணவு மற்றும் விளையாட்டு அம்சங்கள் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இங்கு வர விரும்புவதாகவும், அனுமதி இலவசத்துடன் நல்ல கார் பார்க்கிங்கும் இருப்பதாக தெரிவித்தனர்.

சென்னை போன்ற நகரங்களை போல பீச் போன்ற பொழுது போக்கு அம்சங்கள் கோவை நகரில் இல்லாத நிலையில்,இந்த ஃபுட் அண்ட் பான்டஸி கோவை வாழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

- சீனி,போத்தனூர்.

Comments