இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம்!!

   -MMH 

   கோவை சாய்பாபா காலனியில் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ நாகசாகி ட்ரஸ்ட் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள சாய்பாபா காலனி ஸ்ரீ நாக சாயி மந்திர் வளாகத்தில் அமைந்துள்ள பள்ளியில் இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் விழிப்புணர்வு மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாமை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் ஸ்ரீ நாக சாயி டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தினர். நடைபெற்ற இம்முகாமில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கண் விழித்திரை பரிசோதனை சிறப்பு கண் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. கண்புரை நோய் உள்ளவர்களுக்கும் இலவச அறுவை சிகிச்சை மற்றும் லென்ஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகசாகி அறக்கட்டளையின் செகரட்டரி பாலசுப்பிரமணியன், சுகுமார், சத்திய சாயி சேவா  நிறுவனங்கள் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments