அந்தமான் உட்பட உலகம் முழுவதும் இலவச சேவை மையங்கள் அமைக்கப்படும்! - குருஜி ஷிவாத்மா பேட்டி.

   -MMH 

  அந்தமான் உட்பட உலகம் முழுவதும் இலவச சேவை மையங்கள் அமைக்கப்படும். பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா பேட்டி. 

கோவை கருமத்தம்பட்டி -  அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 22ம் ஆண்டு விழா  இன்று  காலை ஆசிரம வளாகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், நன்கொடையாளர்கள், 

பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். குருஜி சிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறுகையில், தற்போது ஆசிரமம் 20 கிளைகளுடன் 7 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. மேலும் கரூர், நாமக்கல், சேலம், சென்னை, பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளிலும் இலவச சேவை மையங்கள் உருவாக்க அரசாங்கமும் மக்களும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் இலவச சேவை மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் ஆதரவற்றவர்கள்,  கைவிடப்பட்ட பெண்கள், வயதானவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மனநலம் குன்றியவர்களுக்கு உதவ முடியும். இது நன்கொடையாளர்கள் மூலம் சாத்தியமாகிறது என்றார்.

பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில்  ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகம், பெண்கள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் காப்பகம்,  ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதில் 365 க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை  நன்கொடையாளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்கொடையாளர்கள் தின விழா  காலை 10 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. மகா சிவராத்திரி வரும் செவ்வாய்க்கிழமை மார்ச் 1ம் தேதி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுசாமி, திருப்பூர் மாவட்ட ஓம் சக்தி மன்றத் தலைவி சரஸ்வதி சதாசிவம், தாசபளஞ்சிய  மாதர் சங்க பொறுப்பாளர் சுசீலா ஸ்ரீரங்கன், பூமி அமைப்பு பொறுப்பாளர் சரவணன், புதிய நமது இல்லம் நிறுவனர்  சந்திரசேகரன், நீலிகோணம்பாளையம் முத்துசாமி, ராஜாமணி தம்பதியினர், வேர்ல்ட் புட் யூடியூப்  சிவகண்ணன்  நண்பர்கள், கவையன்புத்தூர் தமிழ் சங்க பொறுப்பாளர்கள் புலவர் கணேசன்,  சத்யம் கேட்டரிங் கோபால், சக்கரவர்த்தி உட்பட நிறைய நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments