மரம் விழுந்து துாய்மை பணியாளர் பலி!!

    -MMH 

   கோவை உக்கடம் சி.எம்.சி., காலனி ராமர் கோவில் அருகே பூவரசு மரம் இருந்தது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மேம்பால பணிக்காக குழி தோண்டியிருந்தனர். இதனால் மரம் பிடிமானம் இல்லாத நிலையில் இருந்தது. அங்கு நேற்று மதியம் துாய்மை பணியாளர் சுரேஷ்(50) என்பவர் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக  பூவரசு மரம் வேரோடு சாய்ந்து, அவர் மீது விழுந்தது. மரத்தடியில் சிக்கிக்கொண்ட சுரேஷ் அவரை அருகில் இருந்தோர் கிரேன் உதவியுடன் மரத்தை அகற்றி அவரை மீட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments