இலவச சிகிச்சை முகாம் முன்பதிவுகள் வரவேற்பு!!

    -MMH 

   கோவை சேவா பாரதி, அரவிந்த் கண் மருத்துவமனை, பாரதிய மஸ்துார் சங்கம்(கோவை) சார்பில் கணபதி பஸ் ஸ்டாண்ட் எதிரே, பி.எம்.எஸ்., அலுவலகத்தில் வரும், 27ம் தேதி கண் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படுகிறது.முகாமில் கிட்டப்பார்வை, துாரப்பார்வை போன்ற கோளாறுகள் பரிசோதிக்கப்படும்.கண் கண்ணாடிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் முகாமிற்கு வருவோர் உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரை, இதய நோய் அல்லது வேறு ஏதேனும் தொந்தரவு இருந்தால், அருகிலுள்ள மருத்துவரிடம் பரிசோதனை செய்து, கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ், மருந்து மாத்திரைகளுடன் வர வேண்டும்.கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள், ஆதார் அட்டை நகல் அல்லது வாக்காளர் அட்டை நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டுவர வேண்டும். இந்த முகாம் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும் என்றும் மேலும் விவரங்களுக்கு 97902 50550, 94431 18940, 81229 46472 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சேவா பாரதி கவுரவ தலைவர் ராமநாதன் அவர் கூறியுள்ளார். 

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments