கோவை பொள்ளாட்சி சாலையில் பேருந்துகள் அதிவேகமாக இயக்க படுவதாக பொதுமக்கள் புகார்!!

   -MMH 

   பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி-கோவை சாலையில் அதிவேகமாக பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் வந்தது. 

இதையடுத்து அங்கு பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நவீன கருவி மூலம் பஸ்களின் வேகத்தை கண்காணித்தனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி-கோவை சாலையில் அதிவேகமாக பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் வேகமாக வந்த 2 பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சிலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக செல்லும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments