கோனியம்மன் கோவிலில் இன்று கொடியேற்ற விழா!!
கோனியம்மன் தேர்திருவிழா கடந்த, 14ம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனை முன்னிட்டு இன்று இரவு, 7:00 மணிக்கு மங்கள இசை முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றுகின்றனர். பின்னர் கோனியம்மனுக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. விநாயகர், சூலதேவர் சப்பரத்தில் எழுந்தருள, வீதி உலா நடக்கிறது. கோவிலில் இருந்து சப்பரம், இசை வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, ராஜவீதி, தேர்நிலைத்திடல் வழியாக கோவிலை வந்தடைகிறது. கொரோனா நோய்த்தொற்று குறைந்துள்ளதால் கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments