இலவசமாக பதிவு செய்து தரக்கூடிய பதிவுக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூல்!! - நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

-MMH 

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் தேசிய  அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு முகாம் என பொதுமக்களிடம் பதிவு செய்து தருவதாக கூறி ஒருவருக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூல் செய்து வருவதாக குற்றச்சாட்டு. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுகிறார்கள்.

இலவசமாக பதிவு செய்து தரக்கூடிய இந்த பதிவுக்கு 150 ரூபாய் கட்டணமாக வசூல் செய்து வரக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுகிறார்கள்.

-ரமேஷ், வேலூர்.

Comments