சென்னை மெட்ரோ இரயில்களில் இரே நாளில் 2 லட்சம் பயணிகள் பயணம்!!

 -MMH 

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இம்மாதம் 11.03.2022-ஆம் தேதி மட்டும் 2 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தொடங்கியது. 

மெட்ரோ இரயில் சேவை தொடங்கி 7 ஆண்டு பூர்த்தி அடைந்து பயணிகளுக்கான பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ இரயில் முதல் கட்டம் மற்றும் அதன் விரிவாக்கம் திட்டம் நிறைவேற்றி 54.41 கி.மீ தூரத்திற்கு அதன் இயக்கம் தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ இரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தன் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை இம்மாதம் 11-ம் தேதி அன்று மட்டும் 2 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணத்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவே இருக்கும். இந்த மைல் கல்லையும் தாண்டி புதிய சாதனை படைக்க சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க பயணிகளின் வருகை அதிகரிக்க வேண்டும். இந்த சாதனை தொடர இரயில் பயணிகளின் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments