கோவையில் ஸ்ரீ மகாவீர் சமூக நல சங்கத்தின் ஜெயின் மருத்துவம் சார்பில் 300ரூபாயில் இலவச டயாலிசிஸ் மையம்!!

   -MMH 

   கோவை மாநகர பகுதியில் உள்ள வட கோவை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு பயன்பெறும் வகையில் நண்பர்கள் குழு அமைத்து கோவை ஸ்ரீ மகாவீர் நல சங்கத்தின் திட்டமான ஜெயின் மெடிக்கல் மற்றும் டயாலிஸ் மையத்தை துவக்கி உள்ளனர். ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டயாலிசிஸ்களை முடிந்துள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது 300ரூபாய் என்ற வீதத்தில் ஏழை நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் மேற்கொள்ள டயாலிசிஸ் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளனர். மேலும் சிகிச்சை குறித்து முன்பதிவு செய்வதற்கு 9159326746 மற்றும் 04224774626 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

-சீனி,போத்தனூர்.

Comments