மின்கசிவு காரணமாக தீ விபத்தில் மூச்சு திறனல் ஏற்பட்டு தாய் மகள்கள் உள்பட 3 பேர் பலி.

   -MMH 

   கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் குடியிருந்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர்.

இவரது கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். ஒரு மகள் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தியணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அணைத்தனர். வீட்டின்உள்ளே சென்று பார்த்தபோது சமையல் அறையில் விஜயலட்சுமியும்,அஞ்சலியும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். மற்றொரு பெண் அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தீயனைபுதுறையினர் கூறும்போது "வீட்டின் ஹாளில் இருந்த யூபி எஸ் சில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது எனவும் இதை அனைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சி செய்ததாகவும் ஆனால் அதற்குள் புகையால் மூச்சு தினறல் ஏற்பட்டு சமையல் அறையில் இருந்த அஞ்சலி மற்றும் அவரது தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments