கோவையில் உள்ள மதுரைவீரன் கோயிலில் இருந்து தங்க காசுகள் மற்றும் வாளை திருடிச் சென்ற 3 பேர் கைது!!

     -MMH 

கோவை உக்கடம் பகுதியிலுள்ள சி.எம்.சி.,காலனியில் மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 கிராம் தங்க காசுகள் மற்றும் சுவாமியின் வாள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

இதையடுத்து புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் நவீன்(21), விக்கி என்கிற விக்ர மார்த்தாண்டன்( 20), குட்டி என்கிற பிரகாஷ் ஆகிய மூவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த பதிவு: நடிகர் எஸ்.வி சேகர் காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து திருடப்பட்ட எலக்ட்ரிக் வயர்களையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-சுரேந்தர்.

Comments