சேலத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து- 40 பேர் படுகாயம்!!

    -MMH 

   சேலத்திலிருந்து  ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை  பகுதியில் செல்லும் போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியது. சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். 

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாரதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில்  இறங்கி நின்றது. ஞாயிற்றுக்கிழமை திருமண முகூர்த்த நாள் என்பதால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பேருந்து விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்கள் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு கிரேன்கள்  மூலம் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தினை மீட்டு  போலீஸார் அப்புறப்படுத்தினர்.

-துல்கர்னி உடுமலை.

Comments