திருநெல்வேலியில் 5வது புத்தக திருவிழா துவக்கம் : 126 அரங்குகளுடன் மார்ச் 28 வரை நடக்கிறது!!

   -MMH 

  நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நான்கு முறை புத்தக திருவிழா நடந்துள்ளது. இந்தாண்டு பொருநை நெல்லை புத்தக திருவிழா -என்ற பெயரில் இங்குள்ள வ.உ.சி. மைதானத்தில் நேற்று துவங்கியது. சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப் ரூபி மனோகரன் மேயர் சரவணன் துணை மேயர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை ஆகிய இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சி மற்றும் அதில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

அகழாய்வு களத்தில் தாழிகள் இருப்பது தென்தமிழக தொல்லியல் சின்னங்கள் பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.சென்னைக்கு அடுத்துசென்னைக்கு பிறகு திருநெல்வேலியில் நடக்கும் புத்தகத்திருவிழாவில்தான் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வருகையும் புத்தக விற்பனையும் நடந்துள்ளன. இந்தாண்டும் அதிக விற்பனை நடக்கும் என விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நடக்கும் கண்காட்சியில் பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் பல்வேறு திறன் பயிற்சிகள் நடக்கின்றன. இலவசமாக பார்வையிடலாம்.மார்ச் 28 உலக சாதனைவாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் புத்தகத்திருவிழா வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து மார்ச் 28 வரை இரவு பகலாக புத்தக வாசிப்பில் ஈடுபட்டு உலக சாதனை மேற்கொள்ளவுள்ளனர்.

இத்திருவிழாவில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத விழாவாக நடத்த கலெக்டர் விஷ்ணு நடவடிக்கை எடுத்துள்ளார்.கலெக்டர் பேசுகையில் ''துலுக்கர்பட்டியில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு துவங்கியுள்ளது. திருநெல்வேலியில் ரூ. 15 கோடியில் அமையும் பொருநை அருங்காட்சியகப் பணிகள் விரைவில் துவங்க உள்ளது'' என்றார்.

நெல்லையில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சி வாசிப்பை சுவாசிக்கும் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாளைய வரலாறு செய்தியாளர்

-அன்சாரி, நெல்லை.

Comments