96 வருட பாரம்பரியம் கொண்ட அங்கண்ணன் பிரியாணி, தனது உயர்தர அசைவ உணவகத்தை கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கியது!!

   -MMH 

    கோவையில் 96 வருட பாரம்பரியம் கொண்ட அங்கண்ணன் பிரியாணி தனது நான்காவது தலைமுறையாக, கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் எனும் உயர்தர அசைவ உணவகத்தை கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் துவக்கியது.

கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி  அசைவ உணவு பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற உணவகம் கோவை அங்கண்ணன் பிரியாணி.

96 வருட பாரம்பரியம் கொண்ட இந்த குடும்பத்தின் நான்காம் தலைமுறையாக அதே குடும்பத்தை சேர்ந்த ஜெய்ஸ்ரீ அங்கணன் பழைய சுவை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நவீன அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார்.இந்நிலையில் தனது இரண்டாவது கிளையாக கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸ் எனும் உயர்தர அசைவ உணவகத்தை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ட்ரைஸ்டார் என்க்ளேவ் வளாகத்தில் துவக்கியது.இதற்கான துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநனரும்,பிரபல மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு,ரத்னா குழுமங்களின் தலைவர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உணவகத்தை துவக்கி வைத்தனர்.

உணவகம் குறித்து,கோவை அங்கணன் பிரியாணி ஹவுஸின் மேலாண் இயக்குனர் ஜெய்ஸ்ரீ அங்கணன் கூறுகையில்,  இங்கு பாரம்பரிய கொங்கு சுவை மாறாமல் மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் வறுவல்,சுக்கா,சாப்ஸ்,நல்லி கறி,ஈரல்,குடல் ப்ரை  என மட்டன் வகைகளை தனி சுவையுடன் பரிமாறபடுவதாகவும்,அதே போல சிக்கன்,மீன் வகைகள் என அசைவ பிரியர்களை கவரும் வகையில் இருப்பதாக குறிப்பிட்ட அவர்,குறிப்பாக பிரியாணி என்றால் அதீத மசாலாவாக திகட்டாமல் அளவான,மசாலாவுடன்,வீட்டு முறைப்படி கொங்கு சுவை மாறாமல்   பிரியாணி பரிமாறப்படுவதாக தெரிவித்தார்.விழாவில் 45 வருடங்களாக இதே குழுமத்தில் பணியாற்றும் தலைமை சமையல் கலை நிபுணர் காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.


Comments