நகை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது!!

   -MMH 
    கோவை:  வருமானவரித் துறையில் இருக்கும் டிடிஎஸ், டிசிஎஸ் சட்டங்கள் குறித்து நகை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம், தங்க நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் தங்க கட்டிகள் விற்பனையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை இணைந்து அகில இந்திய தங்கம், வெள்ளி,வைர வியாபாரிகள் சங்கத்தின் ஆதரவுடன் வருமான வரித்துறையில் உள்ள டிசிஎஸ், டிடிஎஸ் சட்டங்கள் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் நகை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வருமான வரித்துறையின் சட்டங்கள் குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராம், ஏப்ரல் 3,4,5 ஆகிய தேதிகளில் மும்பையில் மிகப்பெரிய அளவில் நகை கண்காட்சி நடை பெறுவதாகவும்,கோவை மாவட்டத்தில் இருந்து 10 படைப்புகள்  காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 

- சீனி,போத்தனூர்.

Comments