விரோதம் காரணமாக கல்லூரி மாணவருக்கு கத்தி குத்து!! ஒருவர் கைது!! மூன்று பேர் தப்பி ஓட்டம்!

 -MMH 

கோவை:மதுரை மேலூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(21). ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ள அவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் புதுக்கோட்டையை சேர்ந்த இம்ரான் நசீர் (21), கும்பகோணத்தைச் சேர்ந்த தருண் சுந்தர் (22) மற்றும் கலித் (20),அக்பர் (19)  ஆகியோர் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவர்கள் நால்வரும் சேர்ந்து ஹரிகிருஷ்ணனின் நண்பர் தனுஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது அவரது நண்பர் புஜந்த ராஜா என்பவரும் அவர்களிடம் சென்று கேட்டனர்.இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று  ஹரிகிருஷ்ணன் மற்றும் புஜந்த ராஜா மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள துணி கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த இம்ரான் நசீர், தருண் சுந்தர், கலித், அக்பர் அகியோர் ஹரிகிருஷ்ணன் மற்றும் புஜந்த ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இம்ரான் நசீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புஜந்த ராஜாவை குத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.பலத்த காயங்களுடன் புஜந்த ராஜா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தருண் சுந்தரை என்ற மாணவனை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments