சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கோவிலுக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக்!!பாரை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்ட
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கோவிலுக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கமலாமில் குட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. அதே பகுதியில் விநாயகர் கோயில் ஒன்றும் அமையப் பெற்று தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடு நடத்தியும் வருகின்றனர்.
இந்த நிலையில் அப் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையுடன் இணைத்த பார் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலின் புனிதம் கெடும் என்று கூறியும் இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா, இந்து மக்கள் கட்சி, சிவருத்ர சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாஸ்மாக் பாரை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இவ்விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக சிங்கை ரவி, இந்த மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் ராஜன் சிவசேனா தேசியத்தலைவர் ஓம் பரமானந்தர் பாபாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சீனி,போத்தனூர்.
Comments