மலையேற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை படைத்த சிறுமிகளை, மாவட்ட கலெக்டர் வாழ்த்தினார்!!

   -MMH 

   கோவை:மலையேற்ற நிகழ்ச்சியில் உலக சாதனை படைத்த சிறுமிகளை, மாவட்ட கலெக்டர் வாழ்த்தினார். உலக மகளிர் தினம் மற்றும் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு 'மவுன்டனிரிங் அசோசியேஷன்' மற்றும் கோவை 'கிளைம்ப் ஆன் ஸ்போர்ட் கிளைம்பிங் சென்டர்' இணைந்து, மலையேற்ற உலக சாதனை நிகழ்ச்சி, காஞ்சிபுரம் பகுதியில் நடந்தது.

இதில் கோவை, கவுமாரம் சுசீலா இன்டர்நேஷனல் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் சஹானா, 13 மற்றும் ஷருணிகா, 11 ஆகிய இரண்டு சிறுமிகள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், மலைப்பட்டு என்ற பகுதியில் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. 151 அடி உயர மலையை சஹானா, 11:28 நிமிடங்களில் ஏறியும், ஷருணிகா கண்களை கட்டிக்கொண்டு, 2:4 நிமிடங்களில் இறங்கியும், உலக சாதனை படைத்துள்ளனர். இவர்களின் சாதனை, 'யுனிகோ வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சாதனை படைத்த சிறுமிகள், நேற்று மாவட்ட கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

-சுரேந்தர்.

Comments