கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா!!

   -MMH 

   இந்தியாவின் இரண்டாம் சபரிமலை என அழைக்கப்படும் கோவை சித்தாபுதூர் அய்யப்பன் கோவில் உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்.

இந்தியாவின் இரண்டாம் சபரிமலை என பக்தர்களால் அழைக்கப்படும்  கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்  53-வது ஆண்டு உற்சவ  திருவிழா மற்றும் ஐயப்பசேவா சங்கத்தின் 67 வது ஆண்டு விழா வரும் 30 ந்தேதி  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐயப்பசேவா சங்க நிர்வாகிகள் ராமச்சந்திரன், வேலாயுதம், விஜயராகவன், விஸ்வநாதன், வேலாயுதம் மணி, பாலசுப்பிரமணியம், கண்ணப்பன், இணை ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்..அப்போது,30 ந்தேதி மாலை 7 மணிக்கு துவங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை எட்டு நாட்கள் நடைபெற உள்ள விழாவில் கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ, பாலக்காட்டில்லத்து சிவபிரசாத் நம்பூதிரி தலைமை தாங்குகிறார். இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில் வேலவன் முன்னிலை வகிக்கிறார்.தொடர்ந்து ஒவ்வொரு நாளும், கோவிலில் சிறப்பு பூஜை நடப்பதுடன், நிறைபறை சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், நாட்டிய நாடகம்  நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவில்,திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்த கோபன் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். மேலும்,களபாபிஷேகம் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது. தொடர்ந்து கோழிக்கோடு காதம்பரி கலாக்ஷேத்ரா வழங்கும் யக்சநாரி எனும்  தலைப்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சியும்,  பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜையும், இதனை தொடர்ந்து அய்யப்பா சேவா சங்கத்தின் 67-வது ஆண்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது…தொடர்ந்து, அய்யப்ப சுவாமி, அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு வி.கே.கே. மேனன்ரோடு வழியாக கோவிலை வந்தடைந்து பள்ளி மண்டபத்தில் பள்ளி உறங்குவார்.  8-ம் நாள் திருவிழாவையொட்டி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சுவாமி அமர்ந்து சின்னசாமி ரோடு, சத்திரோடு, கிராஸ்கட்ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குளம் வந்தடைந்து திருக்கோவிலை வந்தடைய உள்ளதாகவும்,தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெற உள ள விழாவில் அமைச்சர் பெரு மக்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments