பேரூராட்சியை கைப்பற்றிய சுயேட்சை! அதிர்ச்சியில் கட்சியினர்!

   -MMH 

   நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சித் தலைவராக சுயேட்சை வேட்பாளர் ஆயிஷா சித்திக்கா எட்டு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது திமுக, அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி வாக்குப் பதிவும் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேரும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 6 பேரும், அதிமுக 1 வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2ம் தேதி பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்ட அடுத்த நிமிடமே, ஒத்தையாக இருந்த அதிமுக வேட்பாளர் கஸ்தூரியும் திமுகவில் இணைந்தார். இதன் மூலம் சுயேட்சைகள் 8, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 7 என இருந்தது.

இந்த சூழலில் இன்று 4ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் திமுக 7 வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளரான ஆயிஷா சித்திக்கா 8 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றார். சுயேச்சை வேட்பாளரான ஆயிஷா சித்திக்கா பேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அப்பகுதி வெகுஜன மக்களை கவர்ந்திருந்தாலும், திமுக, அதிமுகவினரிடையே வருத்தத்தையே உண்டாக்கியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை, 
அமீன் திட்டசேரி.

Comments