'பாசிசத்தை தோற்கடிப்போம் பெண்களை பாதுகாப்போம்' கோசமிட்டபடி ஊர்வலம் சென்ற விமன் இந்தியா மூவ்மெண்ட் !!

   -MMH 

   தற்போது இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாகவும்,பாசிசத்தை ஒழித்தால் மட்டுமே பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என கோவையில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்ட்  பேரணியில் பெண்கள் வலியுறுத்தல்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாசிசத்தை தோற்கடிப்போம் பெண்களை பாதுகாப்போம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பரீதா தலைமையில் நடைபெற்ற பேரணியை எஸ்.டி.பி.ஐ.கட்சியின் 84 வது மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜா உசேன் துவக்கி வைத்தார். 

கோவை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் துவங்கி பிரதான சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணி வந்தடைந்த்து. இதில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாசிசத்தை தோற்கடிப்போம் பெண்களை பாதுகாப்போம் என்று கோசமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய,மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லீமா, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியா முதன்மையான இருப்பதாகவும்,  பாசிசத்தை ஒழித்தால் மட்டுமே பெண்கள் கல்வி உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் காண முடியும் என தெரிவித்தார். பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில்,எஸ்.டி.பி.ஐ. கோவை மண்டல தலைவர் ராஜா உசேன்,NWF மாநில பொது செயலாளர் ஷர்மிளா,மற்றும் எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் அப்துல் காதர்,மாவட்ட தலைவர் முஸ்தபா, பொருளாளர் முகமது இக்பால், மாவட்ட செயலாளர் முகமது இசாக், மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பிளாஸ்டிக் அப்பாஸ்,அப்துல் ரகீம்,பவ்ருதீன், தொகுதி தலைவர் ஹனீப் கான் மாவட்ட செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments