மனைவியை வெட்டிக் கொன்றவர் கைது!!

   -MMH 

   சிங்கநல்லூர் வரதராஜ தெருவில் வசிப்பவர் கணேசன் 55, இவரது மனைவி பொன்னுத்தாயி, 46. இந்த தம்பதிக்கு மதன்குமார், 25, அருண் குமார், 19 என இரு மகன்கள் உள்ளனர். இவர், இங்குள்ள பேக்கரியில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். 

கணேசன், அடிக்கடி மனைவி, மகன்களுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.நேற்று காலை மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணேசன், திடீரென அரிவாளால் மனைவியை வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பொன்னுத்தாயி, அதே இடத்தில் பலியானார். 

கடைக்கு சென்று விட்டு திரும்ப வந்த மகன், தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லுார் போலீசார், சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் மனைவியை கணேசன் கொலை செய்தது உறுதியானதால்  கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments