கோடை காலம் தொடங்கிவிட்டது! போக்குவரத்து காவலர்களின் சிரமத்தை போக்க உயர் அதிகாரிகளின் கனிவான நடவடிக்கை!!

 

-MMH

     கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் போக்குவரத்து காவல்துறையில் வேலை பார்க்கும் காவலர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பொருட்டு ஆங்காங்கே உள்ள சிக்னல்களில் நின்று கொண்டும் சில நேரங்களில் நிழல் கூட இல்லாமல் அவர்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதை பார்த்திருப்போம். இதுபோன்ற சூழ்நிலையில் காவலர்களை உற்சாகப்படுத்தும் எண்ணத்தோடு 2022 ஆம் ஆம் ஆண்டு கோடை காலம் தொடங்கியதை அடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் எல்லைக்குட்பட்ட போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நீர்மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சியை, கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பிரதீப் குமார் இ.கா.ப அவர்களால் இன்று  08-03-2022 ம் தேதி கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை சந்திப்பில் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments