கோவையில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் மோசடிகள்! பொதுமக்கள் அதிர்ச்சி!! தீவிர நடவடிக்கையில் காவல்துறையினர்!!

-MMH

     கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் திவ்யா(36). இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோவை மாநகர சைபர் போலீசாரிடம் தனது செல்போனில் வந்த ஒரு அழைப்பில், பெங்களூர் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், லட்சக்கணக்கில் கடன் தருவதாகவும் தெரிவித்தனர். 

மேலும், சர்வீஸ் கட்டணம் உள்ளிட்ட காரணங்களை கூறி என்னிடம் முன் பணம் கேட்டனர். இதனை நம்பி அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு பல்வேறு கட்டங்களாக ‘கூகுள் பே’ மூலமாக ரூ.5,19,047 பணத்தை செலுத்தினேன். ஆனால் அவர்கள் சொன்னபடி கடன் தராமல் கால தாமதம் செய்தனர். மேலும் செல்போன் அழைப்பு வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிக அளவில் கடன் தருவதாக ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். 

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்  தெரிவித்திருந்தார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராபர்ட் (56). இவரது செல்போன் எண்ணுக்கு பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்யும் படி குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து அவர்கள் அனுப்பிய லிங்கில் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தேன். உடனே எனது கணக்கில் இருந்து இரு கட்டங்களாக ரூ. 49,999 மற்றும் 24,999 என மொத்தம் 74,998 ரூபாய் எடுக்கப்பட்டது. 

எனவே மோசடியில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் சமீப காலமாக இது போன்ற சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வருகிறது. இது பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மோசடி நபர்களிடம் ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments