ஹிஜாபுக்கு ஆதரவாக கோவை தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

   -MMH 

   கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எஸ் டி பிஐ சார்பாக ஹிஜாபுக்கு ஆதரவாகவும் கர்நாடக உயர்நீதிமன்ற அநியாய தீர்ப்பு ரத்து செய்ய கோரியும் கர்நாடகா பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் மக்கள் தீரள் ஆர்ப்பாட்டம் அம்பராம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வால்பாறை சட்டமன்றத் தொகுதி செயலாளர் அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் ஷாஜகான் வரவேற்புரை வழங்கினார்.

கோவை தெற்கு மாவட்ட தலைவர் பீர் முகமது மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர் அலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் பாராளுமன்ற செயலாளர் அப்பன் குமார், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில பேச்சாளர் முகமது யாசிப், மற்றும் பொள்ளாச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  தலைவர்முகமது ரபீக் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் திரளான பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்து தனது கண்டனத்தை பதிவு செய்தனர் சுங்கம் மற்றும் அம்பராம்பாளையம் ஜமாத்தார்களும் இதில் கலந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர் எஸ் டி பி ஐ பொள்ளாச்சி,மற்றும் ஆனைமலை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக. 

- அலாவுதீன்.ஆனைமலை.

Comments