கோவையில் வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு பணம் கொடுத்தவரை கொலை செய்த நபர்கள்.!

   -MMH 

   கோவையில் வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் பணம் கொடுத்தவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (35). சலூன் கடை நடத்தி வந்தார். மேலும், பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார்.

இவரிடம் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகியோர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளனர். இதில் இவர்களுக்குள் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராம்ஜி மற்றும் இளங்கோ நேற்று இரவு சசிகுமாரின் வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து அவரை வெளியே அழைத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி சசிகுமாரை கொலை செய்த இருவரையும் பிடித்தனர்.

முதல் கட்ட விசாரணையில் சசிக்குமாரின் கடையில் ராம்ஜி மற்றும் இளங்கோவன் இருவரும் வாடிக்கையாக வந்து சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையிலே சசிகுமாரிடம் ராம்ஜி ரூ.5லட்சம் வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பணத்தைத் திருப்பி கேட்ட சசிகுமாருக்கும் ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை

Comments