மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது!!

   -MMH 

    கோவை அன்னூர் பகுதியைச் சேர்ந்த, 17 வயது பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் நாமக்கல்லைச் சேர்ந்த சிவக்குமார் (20) என்பவருடன் சமூக வலைதளத்தில் அறிமுகமாகி நட்பாக பழகி உள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த27ம் தேதி தனது காதலன் சிவக்குமாரை காண மாணவி நாமக்கல் சென்றுள்ளார். 

சிவக்குமார் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் கோவில்பாளையம் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் கோவில்பாளையம் போலீசார் நாமக்கல் சென்று, சிறுமியை மீட்டு சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments