உரிமை மீட்பு பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது!!

   -MMH 

   கோவை: ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது ஆபத்தானது, அதே நேரத்தில் அது சாத்தியமற்றது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியே கூறியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடை செய்த கர்நாடக அரசின் உத்தரவை கண்டித்தும்,  அரசியலமைப்பு சட்டங்கள் வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிரான விஷயத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை கண்டித்தும் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஹிஜாப் எனது நம்பிக்கை என்ற முழக்கத்துடன், உரிமை மீட்பு பேரணி மற்றும் மாநாடு கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது. இந்த இந்தப் பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம் துணைத் தலைவர் காலித் முஹம்மத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநாட்டில் பேசிய திருமாவளவன் கூறும் போது:

"எளிமையான தமிழில் இந்த குரான் தயாரிக்கபட்டுள்ளது. இதனை வெளியிடும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை. மதல்லினக்கம் பாதுக்காப்பட வேண்டும், வெறுப்பு அரசியலை செய்பவர் யாராக இருந்தாலும் அவரை நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டியதன் விளைவாக இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாஜகவை இந்து சமுக மக்கள் புரிந்து கொண்டால் நாட்டில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் வராது. நாங்கள் அவர்களது அரசியலை தான் எதிர்க்கிறோம், இந்துக்களை அல்ல. அவர்களது இந்த அரசியல் தான் உள்ளாட்சி தேர்தலில் இந்த பதிலை கொடுத்துள்ளனர். 

தமிழக மீனவர்களுக்கு சிங்களர்களால் கைது, தாக்குதல் தொடர்கிறது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் சிங்களர்களின் தாக்குத்ல் நிலை நீடித்து வருகிறது இது தொடர்பாக முதல்வர் பிரதமரை சந்தித்து பேச வேண்டும். அகதிகளாக வரும் இலங்கை தமிழர்களுக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும், தமிழக அரசு அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அவர்களை இலங்கை அகதிகள் என்ற தன் அடிப்படையில் அவர்களை வரவேற்று உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசை கண்டித்து நடைபெறும்  பொது வேலை நிறுத்ததில் அனைவரும் கலந்துகொள்கின்றனர். வி.சி.க வும் திரளாக ஆதரவளித்து கலந்துகொள்ளும். ஒரு நாடு ஒரே தேர்தல் என்பது  ஒரு ஆபத்தான விசயம் , தேர்த்தல் நடத்த தயாராக இருப்பதாக சொல்லியிருக்கும் நிலையுல் அது சாத்தியமற்றது என பாஜக சுப்ரமணிய சாமியே தெரிவித்துள்ளார்.

- சீனி,போத்தனூர்.

Comments