வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய கலெக்டர்!!

   -MMH 
   வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளை பாராட்டிய கலெக்டர் டாக்டர் ஜிஎஸ் சமீரன் அவர்கள்.

மாற்று திறனாளிகளுக்காக, மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னையில், நடைபெற்றது இந்த போட்டிகளில் கோவை மாவட்டத்தில் இருந்து 52 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர், அவர்கள் 18 நபர்கள் வெற்றி பெற்று பதக்கம், மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனர், இதில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 8 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், பளுதூக்குதல், நீச்சல் போட்டிகள், போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்துக்களை பெற்று கொண்டனர், மேலும் மாற்று திறனாளிகள் மேலும் வெற்றிபெற என்னேன்ன தேவையோ, அனைத்தையும் வழங்க கோவை மாவட்ட நிர்வாகம் துனை நிற்க்கும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஜிஎஸ் சமீரன் அனைத்து மாற்று திறனாளிகளிடம் தெரிவித்தார் தெரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக

-ஹனீப் கோவை.

Comments