பாம்பு கடித்து ஒருவர் பலி!!

-MMH

       கோவை தீத்திபாளையம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சென்னிமலை(83)  இவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் நேற்று வீட்டுத் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தண்ணீர் தொட்டியில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். தண்ணீர் எடுப்பதற்கு பக்கெட்டை எடுத்தபோது அதன் அருகே படுத்திருந்த பாம்பு சென்னிமலையில் விரலை கடித்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments