தியேட்டர் வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது!!

   -MMH 

   கோவை அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம், கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம்,கற்பகம் காம்ப்ளக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. அன்று அதிகாலை தியேட்டர் வளாகத்தில், ரசிகர் நவீன்குமார், 22, பிளக்ஸ் பேனர் அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.

லட்சுமணன்

அப்போது பைக்கில் வந்த இருவர், அவர் மீது பெட்ரோல் குண்டு வீசினர். நவீன்குமாருக்கு தீக்காயம் ஏற்பட்டது. காட்டூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா காட்சிகள், செல்போன் அழைப்புகள் போன்றவற்றை அடிப் படையாக வைத்து விசாரித்தனர். இதில், நெல்லை, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன், 20; கோவையில் வசிக்கிறார். அஜித் ரசிகரான இவரும், நண்பர்கள் சிலரும் வலிமை படம் பார்க்க தியேட்டருக்கு சென்று உள்ளனர். அங்கிருந்த நவீன்குமார், ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி டிக்கெட்டை, ஒன்று 1,500 ரூபாய் வீதம் விற்றதால் அதிருப்தியடைந்த லட்சுமணன், அவரது நண்பர்கள் நால்வர் வாக்குவாதம் செய்து திரும்பினர். இதன் தொடர்ச்சியாக, நவீன்குமார் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில் லட்சுமணன் கைது செய்யப்பட்டுள்ளார். நால்வரை தேடி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments